TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 28 , 2020 1517 days 620 0
  • ரிக்டர் அளவுகோலில் 5.5 என்று பதிவாகிய ஒரு நிலநடுக்கமானது மணிப்பூர் மாநிலத்தைத் தாக்கியுள்ளது.
    • தேசிய நிலநடுக்க மையத்தின்படி, இந்த நிலநடுக்கமானது மணிப்பூரின் மொய்ராங்கிற்கு தென் மேற்கில் 13 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. 
  • சமீபத்தில் “புனிட்டஸ் சாண்க்டஸ்” என்ற ஒரு புதிய சிறிய நன்னீர் வாழ் மீன் இனமானது தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில் கண்டறியப் பட்டது.
    • இது பொதுவாக கேரளாவில் “பரல்” என்றும் தமிழ்நாட்டில் “கெண்டை” என்றும் அழைக்கப் படுகின்றது.
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது பொது முடக்கத்தின்போது அம்மாநிலத்திற்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றிய  தனது முதலாவது திறன் தகவல் அமைப்பை வெளியிட்டுள்ளது.
    • அவர்களின் திறன் மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து அம்மாநிலத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்