TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 2 , 2020 1512 days 611 0
  • ஐக்கிய நாடுகள் ஜுன் 01 ஆம் தேதியை உலகப் பெற்றோர்கள் தினமாகப் பறை சாற்றியுள்ளது.
    • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2012 ஆம் ஆண்டு முதல் ஜுன் 01 ஆம் தேதியை உலகப் பெற்றோர்கள் தினமாக அறிவித்துள்ளது.
  • “என் வாழ்க்கை என் யோகா” போட்டி என்பது ஒரு காணொளி வலைப் பதிவகப் போட்டியாகும்.
    • இது மத்திய ஆயுஷ்துறை அமைச்சகம் மற்றும் இந்தியக் கலாச்சார உறவுகள் ஆணையம்  ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • கோவிட் – 19 ஆனது நாட்டின் சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களால் கையாளப்பட்ட முதலாவது தேசிய அளவிலான இந்திய உயிரியல் பேரிடராகும்.
    • பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மத்திய உள்துறை அமைச்சத்தினால் வழங்கப்பட்டுள்ள விரிவான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் தங்களுக்குத் தகுந்த விதிகளை அதற்காக வேண்டி வகுத்துக் கொள்ளலாம்.
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை (IT - Information Tecchnology) அமைச்சகம் & IT தொழிற்துறை அமைப்பான “நாஸ்காம்” ஆகியவை இணைந்து இந்தியாவின் தேசிய செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்கியுள்ளது.
    • இந்தத் தளமானது செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளின் வளர்ச்சிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • “PM CARES” நிதியானது தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின்  கீழ் “ஒரு பொதுத் துறை ஆணையம் அல்ல” என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
    • எனவே RTI சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம் இந்த நிதி குறித்து எந்தவொரு  தகவலையும் வழங்க மறுக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்