TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 3 , 2020 1511 days 631 0
  • இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரான மத்திய மருந்துத் தர நிர்ணயக் கட்டுப்பாட்டு ஆணையமானது ஜிலெட் அறிவியல் என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ‘ரெம்டெசிவிர்’ என்பதின்  மீதான சந்தைப்படுத்துதல் அங்கீகாரத்திற்காக அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.
    • ரெம்டெசிவிர் மருந்தானது எபோலா நோய்ப் பாதிப்பின் போது பயன்படுத்தப் பட்டது.
  • வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கோவாவில் நடத்தத் திட்டமிடப் பட்டிருந்த 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளானது தற்பொழுது கோவிட் தொற்றுநோய் வெடிப்பின் காரணமாக கால வரையறையின்றி ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
    • இந்தப் போட்டியின் 35வது பதிப்பானது 2015 ஆம் ஆண்டில் கேரளாவில் நடத்தப் பட்டது.
  • சீன நாடானது பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பெருவழிப் பாதைக் கட்டமைப்பின் கீழ் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாயும் ஜீலம் நதியின் மீது 1124 மெகா வாட் திறன் கொண்ட ஒரு ஆற்றல் திட்டத்தை அமைக்க இருக்கின்றது.
    • இந்த மிகப்பெரிய ஆற்றல் திட்டமானது கொஹாலா நீர்மின் திட்டம் என்று அழைக்கப் படுகின்றது.
  • மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான கிரண் ரிஜ்ஜூ இந்திய சமூகப் பயிற்சி மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
    • இந்தத் திட்டமானது பள்ளிகளில் விளையாட்டுக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 02 அன்று அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்