TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 4 , 2020 1510 days 616 0
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது ஆனது சென்னையில் உள்ள கோயம்பேட்டில் காலால் இயக்கப்படும் ஒரு மின் தூக்கியைச் செயல்முறைக்கு கொண்டு வந்துள்ளது.
    • இது இந்தியாவிலேயே இம்மாதிரியில் முதல் முறையிலான மின் உயர்த்திப் பொறிநுட்பமாகும்.
  • முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி டெல்லியில் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் இந்திய மையத்தைத் திறந்து வைத்துள்ளார்.
    • இது காகிதமற்ற முறையில் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தித் தருகின்றது.
  • ஆர்.ஸ்ரீலேகா கேரளாவின் முதல் பெண் தலைமைக் காவல்துறை இயக்குனராகப் பொறுப்பேற்க உள்ளார்.
  • இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஜெனீவாவுக்கு வருகை தந்ததை நினைவில் கொண்டு சுவிட்சர்லாந்து அரசானது மே 26 ஆம் தினத்தை அறிவியல் தினமாக அறிவித்துள்ளது.
  • அமெரிக்காவின் கார்மென் ரெய்ன்ஹார்ட் என்பவர் இரண்டு வருடக் காலத்திற்கு உலக வங்கியின் துணைத் தலைவராகவும் அதன் தலைமைப் பொருளாதார நிபுணராகவும் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்துஜா குழும நிறுவனங்களை நடத்தி வரும் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் செல்வந்தர் பட்டியல் 2020 என்ற பட்டியலில்  இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
    • அறிவியலாளர் சர் ஜேம்ஸ் டைசன் முதல் முறையாக சண்டே டைம்ஸ் செல்வந்தர் பட்டியல் 2020 என்ற பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • பெண்கள் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினம் என்பது 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்.
    • இது மகப்பேறு உரிமைகளுக்கான பெண்களின் உலகளாவிய வலையமைப்பு என்ற அமைப்பால் (WGNRR - Women’s Global Network for Reproductive Rights) ஒருங்கிணைக்கப் படுகிறது.
  • அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய மின்சார விமானமான செஸ்னா கேரவன் அதன் முதல் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளது.
    • இந்த மின்சார விமானத்தின் பொறி இயந்திரம் (என்ஜின்)  மேக்னிக்ஸ் என்ற நிறுவனத்தால்  தயாரிக்கப் பட்டுள்ளது.
  • ஃபோர்ப்ஸின் பத்திரிக்கையின் வருடாந்திர பட்டியலின் படி  சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதல்முறையாக உலகின் அதிக சம்பளம் பெறும் ஒரு தடகள விளையாட்டு வீரரராக குறிப்பிடப் பட்டுள்ளார்.
    • ஜப்பானின் நவோமி ஒசாகா என்பவர் அதிக சம்பளம் பெறும் பெண் தடகள வீரராக உருவெடுத்துள்ளார். தனது சக டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை முந்திய முதல் பெண் விளையாட்டு வீரர் இவர் ஆவர்.
  • ரஷ்யா அணுசக்தியால் இயங்கும் தனது ஸ்கிஃப் என்ற ஏவுகணையைச் சோதனை செய்து வருகிறது. இது 6,000 மைல் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.
    • இது உலகின் மிகப்பெரிய அழுக்கு சர்வநாசகார குண்டு” (டூம்ஸ்டே  - உலகத்தை முடிவிற்குக் கொண்டு வரும் நாள்) என்று அழைக்கப் படுகிறது.
  • உலக செரிமான சுகாதார தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 29 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
    • 2020 ஆம் ஆண்டுப் பிரச்சாரத்தின் கருப்பொருள் ஆனது "குடல் நுண்ணுயிர்க் கட்டு (Gut Microbiome): ஓர் உலகளாவியப் பார்வை" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்