TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 5 , 2020 1509 days 655 0
  • கொல்கத்தா துறைமுத்தின் பெயரை ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக அறக் கட்டளை என்று பெயர் மாற்றுவதற்கு வேண்டி மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
    • முன்னதாக, இந்தப் பெயர் மாற்ற அறிவிப்பானது கொல்கத்தா துறைமுத்தின்    150வது ஆண்டு நினைவு தினக் கொண்டாட்டங்களின் போது வெளியிடப்பட்டது.
  • அனுபவ் என்பது “SPIC MACY” என்ற அமைப்பால் நடத்தப்படும் ஒரு வாரக் கால நிகழ்நேரத் திட்டமாகும். இது இந்தியக் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மாய மற்றும் பன்முகத் தன்மை கொண்ட கோணங்களில் பங்கு பெறும் இளைஞர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • இளைஞர்களிடையே இந்தியப் பாரம்பரிய இசை, மற்றும் கலாச்சார ஊக்குவிப்பிற்கான சமூகம் என்பதே  “SPIC MACAY” (Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth) ஆகும்.
  • இந்திய அரசானது பால் ஒன்றியங்கள் மற்றும் பால் உற்பத்தி நிறுவனங்களுடன் பணியாற்றும் 1.5 லட்சம் பால் பண்ணை விவசாயிகளுக்காக வேண்டி கிசான் கடன் அட்டைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
    • இது ஆத்ம நிர்பர் பாரத் அபியான் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் கீழ் செயல்படும் திரைப்பட ஊடகத்தின் பகுப்பாய்வு குறித்த பீமல் ஜுல்கா குழுவானது திரையுலகத் தொழிற் துறையின் வளர்ச்சிக்காக தனது அறிக்கையை அந்த அமைச்சகத்திடம் சமர்ப்பித்து உள்ளது.
  • இந்தியப் பிரதமர் மோடி ஆஸ்திரேலியப் பிரதமரான ஸ்காட் மோரிசனுடன் காணொலி மூலம் இருதரப்புச் சந்திப்பை மேற்கொள்ள இருக்கின்றார்.
    • இந்தியாவினால் மேற்கொள்ளப்பட இருக்கும் முதலாவது காணொலி வழியிலான இருதரப்புச் சந்திப்பு இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்