TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 12 , 2020 1502 days 656 0
  • கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆணையமானது ஏறத்தாழ 200 இந்திய ஏற்றுமதியாளர்களுக்காக 4 நாட்கள் கால அளவுள்ள காணொளி வழியிலான ஒரு கண்காட்சியை நடத்தியுள்ளது.
    • இது இந்தியாவின் முதலாவது காணொளி வழியிலான வர்த்தகக் கண்காட்சி ஆகும்.
  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியமானது பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் தூரந்த் சுங்கம் என்ற தனது தனித்துவமானத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
    • இந்தத் திட்டத்தின் கீழ், இறக்குமதியாளர்கள் இறக்குமதித் துறைமுகத்திற்கு வெளியே அமைந்துள்ள சுங்கத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் ஒரு நேரடியாக அல்லாத ஆய்விற்குப் பின்னர், தங்களதுப் பொருட்களுக்கு வர்த்தக அனுமதியைப் பெற இருக்கின்றனர்.
  • தேசியத் திறன் வளர்ச்சிக் கழகமானது (NSDC - National Skill Development Corporation) தனது பயிற்சிப் பங்காளர்களுக்கு டிசிஎஸ் iON டிஜிட்டல் கண்ணாடி அறை வசதிகளை அணுகுவதற்கு வேண்டி டாடா ஆலோசக நிறுவனத்துடன் இணைந்து உள்ளது.
    • NSDC மற்றும் டிசிஎஸ் ஆகிவற்றிற்கிடையேயான இந்தப் புதிய ஒருங்கிணைப்பானது  “eskill இந்தியா” என்ற NSDCயின் ஆன்லைன் (நிகழ்நேர) ஒருங்கிணைப்புத் தளத்தை வலுப்படுத்த உதவ இருக்கின்றது.
  • இந்தியப் பளுதூக்குதல் வீரரான K சஞ்சிதா சனு என்பவர் சர்வதேசப் பளுதூக்குதல் கூட்டமைப்பினால் (IWF - International Weightlifting Federation) நடத்தப்பட்ட ஊக்கமருந்துச் சோதனையில் வெற்றியடைந்துள்ளார்.
    • IWF ஆனது இந்த முடிவை உலகப் போதை மருந்து தடுப்பு ஆணையத்தின் (WADA - World Anti-Doping Agency) பரிந்துரையின் அடிப்படையில் எடுத்துள்ளது.
  • வங்க தேச அரசானது “சோகோஜோதா” என்ற ஒரு நிகழ்நேர அமைப்பைத் தொடங்கியுள்ளது.
    • இது அந்நாட்டில் கொரானா வைரசிற்காகச் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் மற்றும் கோவிட் – 19 நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்கள் ஆகியோருக்கு இடையே பிளாஸ்மா பரிமாற்றத்தை மேற்கொள்ள வழிவகை செய்கின்றது.
  • தனியார் துறை நிறுவனங்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக இஸ்ரோ அமைப்பின் வசதிகள் மற்றும் அதன் இதர சொத்துகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட இருக்கின்றது.
  • சௌராஷ்டிரா – நர்மதா அவதாரன் நீர்ப்பாசனத் திட்டத்தின் இரண்டாம் நிலையானது ஆகஸ்ட் – 15 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி கூறியுள்ளார்.
    • இந்தத் திட்டமானது நர்மதை நதியின் நீரை வைத்து சௌராஷ்டிரா மற்றும் கட்ச் ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்