TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 17 , 2020 1497 days 633 0
  • சர்வதேச வெளிறல் தன்மை தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 13 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
    • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பிரகாசித்தலை ஏற்படுத்துதல்” என்பதாகும்.
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவை குழந்தைத் தொழிலாளர் குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
    • இந்த அறிக்கையானது “கோவிட் – 19 மற்றும் குழந்தைத் தொழிலாளர் : நெருக்கடிக் காலம், செயல்படுவதற்கான நேரம்” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப் பட்டுள்ளது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது “Germiklean” என்ற ஒரு கிருமிநாசினி  அறையை உருவாக்கியுள்ளது.
    • இது பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் சீருடைகள் மேல் கிருமிநாசினி பயன்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்படும் ஒரு கிருமிநாசினி அறையாகும்.
  • கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2019 ஆம் ஆண்டில் மிக அதிகமாக அமேசான் பகுதியில் காடுகளின் அழிப்பானது நடைபெற்றுள்ளதாக தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
    • 2019 ஆம் ஆண்டில் அந்நாட்டின் அதிபராக ஜெய்ர் போல்சனரோ பதவியேற்ற பிறகு இந்தப் பகுதியில் காடுகளின் அழிப்பானது அதிகரித்துள்ளது.
  • நியூசிலாந்து, பிஜி, மோன்டிங்க்ரோ, தான்சானியா, வாடிகன், செசல்ஸ், பப்புவா நியூ கினியா, திமோர்-லெஸ்டி, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் போன்ற நாடுகள் தங்களை கோவிட் – 19 நோய்த் தொற்றற்ற நாடுகளாக அறிவித்துள்ளன.
  • பஞ்சாப் மாநில அரசானது கோவிட் – 19 நோய்த் தொற்றை ஒழிப்பதற்கு வேண்டி வீடுகளுக்கேச் சென்று ஆய்வை மேற்கொள்வதற்காக “கர் கர் நிகரானி” என்ற ஒரு கைபேசிச் செயலியைத் தொடங்கியுள்ளது.
  • ஐஐடி – கரக்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பொது இடங்களில் சமூக விலகலைக் கண்காணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட இணைய வழியிலான ஒரு நேரடிக் கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.
  • சமீபத்தில் மிகவும் புகழ்பெற்ற முதுபெரும் உருதுக் கவிஞரான ஆனந்த் மோகன் சூட்சி “குல்சர்” தெஹல்வி என்பவர் காலமானார்.
    • இந்திய அரசினால் உருது மொழியில் வெளியிடப்படும் ஒரே அறிவியல் பத்திரிக்கையான “சயின்ஸ் கீ துனியா” என்பதின் ஆசிரியர் குல்சர் ஆவார்.
  • சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் அரசானது வளர்ப்புப் பறவைகள் (கோழி) கொள்கை, 2020 என்ற கொள்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • சிலி மற்றும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பட்டகோனியப் பகுதியில் “மகலன்டோன் பைகாஷ்கென்க்” என்று அழைக்கப்படும் ஒரு உயிரினத்தின் பற்களைக் கண்டறிந்துள்ளனர்.
    • இது 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பாலூட்டி வகையைச் சேர்ந்ததாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்