TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 18 , 2020 1496 days 591 0
  • இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான “பரோடா வங்கியானது” தனது கடன் வழங்கும் நடவடிக்கைகளை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது, அம்மாநிலத்தில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களுக்குக் கல்வி அளிப்பதற்காக “பால் சிராமிக் வித்யா யோஜனா” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • பெப்சிகோ என்ற அமைப்பானது “வாட்டர் எய்டு” என்ற நிறுவனத்துடன் இணைந்து மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிராவில் அதிக அளவு நீர்ப் பற்றாக்குறை  அபாயமுள்ள பகுதிகளில் பெண்களுக்கு உதவுவதற்காகவும் வேளாண் சமூகத்தினருக்குப் பாதுகாப்பான குடிநீர் அணுகலை உறுதி செய்வதற்காகவும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
  • கர்நாடக மாநில அரசானது சிராவதி உப்பங்கழிப் பகுதியில் உள்ள ஒரு மனிதர்கள் வாழாத தீவில் குரங்குப் பூங்கா ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.
  • “யக்சகானா” நாடகக் கலையின் ஒரு வகையான “தாலமாடல்” என்ற ஒரு பாரம்பரியக் கலை என்பது கர்நாடகா மற்றும் கேரளாவின் காரவலி மற்றும் மலநாடு பகுதியில் நடைபெறும் உரையாடல் கலை மற்றும் விவாதக் கலை போன்றவற்றில் ஒரு பாரம்பரிய வடிவமாகும். 
  • ராஜ பிரபா திருவிழாவானது ஒடிசாவில் கொண்டாடப்பட்டது.
    • இது பூமித் தாய் (பூமி தேவி) மற்றும் தாய்மார்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்