TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 20 , 2020 1494 days 723 0
  • சமீபத்தில் கேரள மாநில அரசானது “முதல் மணி” (First Bell) என்ற ஒரு மெய்நிகர் பள்ளி வகுப்பு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • ஒடிசா மாநில அமைச்சரவையானது “பந்தே உத்கல் ஜனனி” என்ற பாடலுக்கு மாநிலப் பாடல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
    • இது  கண்டகபி லட்சுமிகாந்த் மோகபத்ரா என்பவரால் எழுதப்பட்ட ஒரு தேசப் பற்று மிக்கக் கவிதையாகும். 
  • மேற்கு வங்காள மாநிலமானது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக அம்மாநிலத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்களுக்காக வேண்டி “கர்மபூமி” என்ற ஒரு வேலைவாய்ப்புத் தளத்தைத் தொடங்கி உள்ளது.
  • தெலுங்கானாவில் ஹைதராபாத் நகரக் காவல் துறையானது “இவள் மரியாதை, சமத்துவம் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றின் மூலம் வெல்வாள்” (STREE - She Triumphs through Respect, Equality, and Empowerment) என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
    • இது குடும்ப வன்முறை மற்றும் கொடுமைப்படுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உதவி செய்வதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • சர்வதேச சுற்றுலா தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 18 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • வரலாற்று அறிஞரான தின்யார் படேல் “நௌரோஜி : இந்திய தேசியவாதத்தின் முன்னோடி” என்ற ஒரு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • கோவிட் – 19  நோய்த் தொற்றுக்கான  தடுப்பு மருந்துகளை முன்னுரிமை அடிப்படையில் அணுக (வாங்க) இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
    • இந்த முன்னுரிமை அடிப்படையிலான உள்ளூர்ச் சந்தையானது “தடுப்பு மருந்து மீதான தேசிய வாதம்” என்று அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்