TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 23 , 2020 1491 days 567 0
  • சமீபத்தில், வங்கதேசத்திலிருந்து மேற்கொள்ளப் படும் ஏற்றுமதியில் 97% பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
  • எஸ்ஐடிபிஐ வங்கியானது மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சக வழிகாட்டுதலின் கீழ் பிரதான் மந்திரி சுவாநிதி திட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்றது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான உர்ஜித் படேல் தேசியப் பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் தலைவராக அடுத்த 4 ஆண்டுக் காலத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இது பல்வேறு கொள்கைச் சீர்திருத்தங்கள் குறித்து அரசாங்கத்துடன் நெருங்கிப் பணியாற்றும் வகையில் தில்லியில் உள்ள ஒரு கொள்கை வகுப்பு நிறுவனம் ஆகும்.
  • கர்நாடக மாநில அரசானது முகக் கவசத்தின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜுன் 18 ஆம் தேதியைமுகக் கவச தினமாகஅனுசரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்