TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 22 , 2020 1492 days 537 0
  • ஜுன் 23 அன்று நடக்கவிருந்த ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் வருடாந்திர ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.  
    • இந்த ஆண்டின் ரத யாத்திரையை அனுமதித்தால் ஜகன்நாத கடவுள் கூட நம்மை மன்னிக்க மாட்டார் என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • நாணய மதிப்பில், மும்பையை மையமாகக் கொண்ட இந்தியப் பன்னாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனத்தின் மதிப்பானது 150 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
    • ரூ.11 லட்சம் கோடிக்கும் மேல் சந்தை மதிப்பை அடைந்த முதலாவது இந்திய நிறுவனம் இதுவாகும்.
  • சரி செய்யப்பட்ட நிகர வருமானம் (AGR - Adjusted Gross Revenue) என்பது மத்திய தொலைத் தொடர்புத் துறையினால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விதிக்கப் படும் ஒரு பயன்பாட்டு மற்றும் உரிமக் கட்டணமாகும்.
  • லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி மையமானது வைரஸ் எதிர்ப்பு மருந்தான யுமிபெனோவிர் என்பதின் மீதான மூன்றாவது கட்டச் சோதனையை மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுள்ளது.
    • யுமிபெனோவிர் மருந்தானது வைரஸ்கள் மனித உயிரணுக்களுக்குள் செல்வதைத் தடை செய்கின்றது. இது நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிப்பதன் மூலம் திறம்படச் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்