TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 24 , 2020 1490 days 656 0
  • சமீபத்தில் புதிய கொரானா வைரஸ் சார்ஸ் Cov-2 நோய்த் தொற்றானது  நெதர்லாந்தில் மென் பயிர்த் தோல் கொண்ட ஒரு சிறிய விலங்கில் பரவத் தொடங்கியுள்ளது.
    • ஒரு நுண்ணுயிரி மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் பரவினால், அது தலைகீழ் நிலையிலான விலங்கு வழிப் பரவும் நோய் என்று அழைக்கப் படுகின்றது.
  • திரிபுரா மாநில அரசானது பள்ளிக் குழந்தைகளுக்காக ஒரு திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
    • இந்தத் திட்டமானதுஏக்து கேலோ, ஏக்து பதோ” – “கொஞ்சமாக விளையாடு, கொஞ்சமாக படிஎன்ற பெயர் கொண்ட ஒரு திட்டத்தைக் கொண்டு இருக்கின்றது.
  • அஸ்ஸாமின் குவஹாத்தியில் உள்ள காமக்கியா ஆலயத்தில் 1565 ஆம்  ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் அம்புபாச்சி மேளா என்ற திருவிழாவானது தற்பொழுது முதன்முறையாக நடத்தப் படாது.
    • காமக்கியா ஆனது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
  • கொரானா வைரஸின் சிகிச்சை முறைக்காக வேண்டி மருந்து நிறுவனங்களால் இந்தியாவில் 3 மருந்துகள் (பேபி ப்ளு, சிப்ரெமி, கோவிபோர்) அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
    • கிளென்மார்க் மருந்து நிறுவனமானது சாதாரணது முதல் கடுமையான கொரானா வைரஸ் சிகிச்சைக்காக பேபிப்ளு என்று பெயரிடப்பட்ட ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • நொய்டா மெட்ரோ இரயில் நிலையத்தின் 50வது பகுதியானது நொய்டா மெட்ரோ இரயில் கழகத்தினால் திருநர் சமூகத்திற்காக வேண்டி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • லாரன்ட் பொக்கிலெட் என்பவர் உலகளாவிய வளர்ச்சியின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளதாக உலகத் தடகள அமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்