TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 25 , 2020 1489 days 554 0
  • ஆர்ஐசி/RIC (ரஷ்யா – இந்தியா – சீனா / Russia – India - China) நாடுகளின் சந்திப்பானது இரண்டாம் உலகப் போரின் 75வது நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக நடத்தப் பட்டது.
  • பதஞ்சலி நிறுவனமானதுகொரொனில்” “சவசரி வாத்திமற்றும் அனு தைலம் என்ற தனது ஆயுர்வேத மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இந்த மருந்தின் மூலம் கோவிட் – 19 நோய்த் தொற்றிற்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று அந்நிறுவனம் உரிமை கோருகின்றது.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக ஹஜ் புனித யாத்திரையானதுகுறைந்த அளவிலான நபர்களைக் கொண்டே நடத்தப்படும்என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
    • மெக்கா புனித நகரில் நடத்தப்படும் ஹஜ் புனித யாத்திரையானது முஸ்லீம்கள் தங்களது வாழ்வில் ஒரு முறையாவது கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகின்றது.
  • அமெரிக்க அரசானது அந்த நாட்டுப் பணிகளைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரைபச்சை அட்டைமற்றும் புலம்பெயர்ந்த பணி நுழைவு இசைவை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்