TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 26 , 2020 1488 days 643 0
  • அண்டர்டேக்கர்” என்று வெகுவாக அறியப்படும் மார்க் வில்லியம் காலவே என்பவர் ஒரு அமெரிக்கத்  தொழில்சார் மல்யுத்த வீரராவார்.
    • இவர் உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
  • அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப் இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் என்பவரை தேசிய அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்துள்ளார்.
    • சுப்ரா சுரேஷ் என்பவருக்குப் பிறகு இந்தப் புகழ்பெற்ற அறிவியல் பதவிக்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது இந்திய-அமெரிக்கர் இவராவார்.
  • கோவிட் – 19 பிரச்சினைக்கு மத்தியில் 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஐரோப்பாவில் தேசிய அளவிலான தேர்தலை நடத்திய முதலாவது நாடு செர்பியா ஆகும்.
  • இந்தியாவானது அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு தூரக் கிழக்கில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்காக ஐக்கிய நாடுகள் நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க உறுதி அளித்துள்ளது.
  • தமிழ்நாடு முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி நாமக்கலில் ஒரு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலையைத் திறந்து வைத்தார்.
    • இந்த ஆலையானது 25 கோடி செலவில் இந்திய எண்ணெய்க் கழகத்தினால் அமைக்கப் பட்டுள்ளது.
  • நோபல் பரிசு பெற்றவரான அமர்த்தியா சென் 2020 ஆம் ஆண்டிற்கான  ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் புகழ்பெற்ற அமைதிப் பரிசை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்