TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 28 , 2020 1486 days 606 0
  • கிராண்ட் மாஸ்டரான P. ஹரிகிருஷ்ணா என்பவர் 1,50,000 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட சதுரங்க மாஸ்டர்களைக் கொண்ட குழுவில் இணையும் முதலாவது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார். 
  • மகாராஷ்டிர மாநில அரசானது தொழிற்துறைகளுக்கான புதிய முதலீடுகளைக் கவர்வதற்காக வேண்டி “மகா பர்வானர்” என்ற திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.  
  • நாசாவானது வாஷிங்டன் டி.சியில் உள்ள தனது தலைமையகக் கட்டிடத்திற்கு அதன் முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் பொறியாளரான மேரி W. ஜாக்சன் என்பவரது பெயரை வைத்துள்ளது. 
  • வினி மகாஜன் என்பவர் பஞ்சாப் மாநிலத்தின் முதலாவது பெண் தலைமைச் செயலாளராக உருவெடுத்துள்ளார். 
  • 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ள இருக்கும் விண்வெளி நடைபயணத்திற்காக வேண்டி முதலாவது சுற்றுலாப் பயணியை விண்வெளிக்குக் கொண்டு செல்ல இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.  
  • ஐரோப்பியக் கால்பந்து விளையாட்டுப் போட்டியில், லிவர் பூல் அணியானது முதன்முறையாக 2019/20 ஆண்டுப் பதிப்பின் ஆங்கிலப் பீரிமியர் லீக் பட்டத்தை வென்றுள்ளது.  

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்