TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 2 , 2020 1482 days 608 0
  • சையத் அலி ஷா கிலானி என்பவர் காஷ்மீரில் மிகப்பெரிய பிரிவினைவாத அரசியல் முன்னணிக் கட்சியான ஹுரியத் மாநாட்டுக் கட்சியிலிருந்து வெளியேறி உள்ளார்.

  • இந்தியப் பிரதமர் புலம்பெயர்ந்த மற்றும் ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக வேண்டி 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை நீட்டித்துள்ளார்.

  • மத்திய அரசானது ஒரு தேசம், ஒரு குடும்ப அட்டை என்பதின் கீழ் ஒடிசா, மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய மேலும் 3 மாநிலங்களை இணைத்துள்ளது.

  • நிரலாக்கம் மற்றும் தரவு அறிவியல் துறையில் உலகின் முதலாவது நிகழ்நேர இளங்கலை அறிவியல் (ஆன்லைன் பி.எஸ்.சி) பட்டப் படிப்பானது தயார் செய்யப் பட்டு, மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் வழங்கப்பட இருக்கின்றது.

  • மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புச் செய்தி மடலின் முதலாவது பதிப்பானது தொடங்கப் பட்டுள்ளது.

    • இந்தச் செய்தி மடலின் பெயர் “மத்சயா சம்பாதா” என்பதாகும்.

  • ஸ்விகி நிறுவனமானது ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து “ஸ்விகி நாணயம்” (Swiggy Money) என்ற தனது சொந்த டிஜிட்டல் பணப் பையை அறிமுகப்படுத்தியுள்ளது.

    • இது தொழிற்துறையின் முதலாவது உடனடி டிஜிட்டல் பணப் பையாகும்.

  • இந்தியாவைச் சேர்ந்த 36 வயது நிரம்பிய நிதின் மேனன் என்பவர் சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் சிறப்பு நடுவர் குழுவின் இளம் உறுப்பினராக உருவெடுத்துள்ளார்.

    • முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவரான ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் மற்றும் சுந்தரம் ரவி ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது நபராக இவர் இந்தக் குழுவில் இணைந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்