TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 8 , 2020 1476 days 766 0
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில், 2020 ஆம் ஆண்டின் விரிக்சரூபன் என்ற திட்டத்தின் கீழ், ஜூலை 5 அன்று ஒரே நாளில் 25 கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப் பட்டன.
  • இந்தியாவானது உயர் தாக்கம் கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் ஆப்கானிஸ்தானுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
  • இஸ்ரேல் ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாவிட் என்ற விண்வெளிக் கலனைப் பயன்படுத்தி “ஒபேக் 16” என்ற ஒரு புதிய உளவு செயற்கைக் கோளை விண்வெளி சுற்று வட்டப் பாதைக்குள் செலுத்தியது.
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவரான RC பார்கவா என்பவர் “போட்டியாளராக மாறுதல் – இந்தியாவிற்கான ஒரு பயிற்சியாளர் கையேடு” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் எல்பிஜி எரிவாயு இணைப்பைக் கொண்ட நாட்டின் முதலாவது மாநிலம் இமாச்சாலப் பிரதேசம் ஆகும்.
  • 5 முறை உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சீனாவைச் சேர்ந்த லின் டான் என்பவர் பாட்மின்டன் போட்டியிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
  • உலக சாக்லேட் (கோகோ மிட்டாய்) தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 07 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகின்றது.
  • உலக மன்னிப்புத் தினமானது ஜூலை 07 அன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்