மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் உணவுப்பூங்கா (சாத்தாரா மெகா உணவுப் பூங்கா தனியார் நிறுவனம்) சாத்தாரா மாவட்டத்தின் தேகான் (Degaon) கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது 12 வது உணவுப்பூங்கா ஆகும்.
ஆந்திரப்பிரதேசத்திலுள்ள பிரஞ்சிபுரம் ரயில்நிலையம் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக உருவெடுத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் காந்திநகர் ரயில்நிலையம் மற்றும் மும்பையின் மாத்துங்கா ரயில்நிலையம் ஆகியவற்றைத் தொடர்ந்து பிரஞ்சிபுரம் மூன்றாவது இடத்தில் உள்ளது.