TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 7 , 2020 1481 days 745 0
  • 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 அன்று, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசங்கள் புதிய ஒன்றியப் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டதின் முதலாவது ஆண்டு தினத்தைக் கொண்டாடின.
  • மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் சஹாக் கோப்டியூப் என்சிடிசி இந்தியாஎனப்படும் தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் யூடியூப் (வலையொலி) அலைவரிசையைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சரான கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் மத்திய ஜவுளி & பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிரிதி இராணி ஆகியோர் புது தில்லியில்சுவச் பாரத் கிராந்தி” (இந்தி) என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது சசிதர் ஜகதீசன் என்பவரை எச்டிஎப்சி வங்கியின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சரான பிரகலாத் சிங் படேல்தென்சாவல் கோல்ப் தங்குமிடத் திட்டம்எனப்படும் மிசோரமின் முதலாவது கோல்ப் பகுதியைக் காணொலி முறையில் திறந்து வைத்துள்ளார்.
    • இது மத்திய சுற்றுலாத் துறையின் சுவதேஷ் தர்ஷன் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படுகின்றது.
  • லெபனானின் தலைநகரான பெய்ருட்டில் அம்மோனியம் நைட்ரேட் என்ற  அதீத ஆபத்தான வெடிபொருட்கள் சேமித்து வைக்கப் பட்டிருந்த துறைமுகக் கிடங்கில் மிகப்பெரிய வெடி விபத்தானது ஏற்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது கல்வி மீதான தொற்று நோயின் தாக்கம் குறித்த தனது கொள்கைசார் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • SS மோட்டிவேஷன் என்ற அமைப்பின் நிறுவனரான சுனில் யாதவ் SS என்பவருக்கு ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனக் கூட்டமைப்பு ஆகியவற்றினால் ஏற்படுத்தப்பட்டகரம்வீர் சக்ரா விருதுவழங்கி கௌரவிக்கப் பட்டது.
  • நவீன இந்தியத் திரையரங்கின் தந்தையான இப்ராகிம் அல்காசி அவர்கள் சமீபத்தில் காலமானார்.
    • இவர் 2010 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் 1991 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதையும் 1996ல் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
  • கணினி சுட்டியின் இணைக் கண்டுபிடிப்பாளரான வில்லியம் இங்கிலீஷ் அவர்கள் சமீபத்தில் காலமானார்.
    • இவர் ஆரம்ப கால கணினிச் செயல்பாடுகளில் பணியாற்றியவரான டோக் எங்கள்பெர்ட் அவர்களால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்களின் உதவியுடன் 1963 ஆம் ஆண்டில் முதலாவது கணினிச் சுட்டியை உருவாக்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்