TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 8 , 2020 1480 days 780 0
  • இந்தியாவின் முதலாவது நடமாடும் ஆர்டி-பிசிஆர் சோதனை ஆய்வகமானது பெங்களுருவில் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
    • இது இந்திய அறிவியல் நிறுவனத்தினால் மேம்படுத்தப் பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 9000 சோதனைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
  • கர்நாடகாவின் முதலாவது பெண் இந்தியக் காவல் பணி அதிகாரியான D. ரூபா முட்கில் அவர்கள் அம்மாநிலத்தின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தப் பதவியை வகிக்கும் முதலாவது பெண் அதிகாரியும் இவராவார்.
  • 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று ஜப்பான் உலகின் முதலாவது அணு குண்டு தாக்குதலின் 75வது நினைவு தினத்தை அனுசரித்தது.
    • 1945 ஆம் ஆண்டில் அமெரிக்கப் போர் விமானமான எனோலா கே, “லிட்டில் பாய்” என்ற பெயர் கொண்ட ஒரு அணு குண்டை ஹிரோசிமா நகரின் மீது வீசியது.
  • ஆந்திரப் பிரதேசத்திற்குப் பிறகு காவல் துறைக்காக சமீபத்தில் ஒரு கையேட்டை வெளியிட்டுள்ள 2வது மாநிலம் குஜராத் ஆகும்.
  • அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய பங்களிப்பு நாடு ஜப்பான் ஆகும்.
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால்நிஷாங்க்இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மூர் மாவட்டத்தில் உள்ள தௌலா கானில் அமைய இருக்கும் இந்திய மேலாண்மை நிறுவனம்சீர்மூர் என்ற கல்வி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்