அருணாச்சல் எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடப்படுள்ள புதிய இரயில் அருணாச்சலப் பிரதேசத்தின் நாகர்லகுன் (Nagarlagun) மற்றும் டெல்லியின் ஆனந்த்விகார் முனையம் ஆகியவற்றுக்கிடையே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தேசிய தலைநகரில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் ராஜன் கோஹைனால் தொடங்கி வைக்கப்பட்டது.
இது அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து நேரடியாக டெல்லியை இணைக்கும் 2வது இரயில் பாதையாகும். அதே போன்று வடகிழக்குப் பகுதியிலிருந்து டெல்லியை இணைக்கும் 14வது இரயில் பாதையாகும்.
வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையமைச்சர்ஜிதேந்திர சிங் இந்தியா-இஸ்ரேல் உறவுகளுக்கான “நமஸ்தே ஸலோம்“ என்ற பத்திரிக்கையை (Magazine) தொடங்கி வைத்தார். இந்த பத்திரிக்கை முன்னாள் MP தருண் விஜய்யால் தொகுக்கப்படுகிறது.