TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 26 , 2020 1461 days 675 0
  • தவில் கலைஞரான G. சிலம்பரசன் என்பவருக்கு இந்திய உலக சாதனைகள் அமைப்பால் உலக சாதனை விருதானது வழங்கப் பட்டுள்ளது. இது கர்நாடக இசையின் ஒரு பகுதியான 108 தாளங்களை எவ்வாறு கையாளுவது குறித்த காணொலியை ஆவணப் படுத்தியதற்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ராஜிவ் குமார் அவர்கள் தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். இவர் சமீபத்தில் பதவி விலகிய அசோக் லவாசா என்பவரது பதவியின் இடத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
  • ‘பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினமானது’ (EOD - Earth Overshoot Day) ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கான மனித இனத்தின் வள நுகர்வானது அந்த ஆண்டிற்கான  இயற்கை வளங்களை மீண்டும் உருவாக்கக் கூடிய பூமியின் திறனை மீறும் வகையில் கணிக்கப்பட்ட ஒரு விளக்க நாட்காட்டியாகும்.
    • 2020 ஆம் ஆண்டில் EOD ஆனது உலகம் முழுவதும் கொரானா நோய்த் தொற்று பொது முடக்கத்தின் காரணமாக 2019 ஆம் ஆண்டில் கடைபிடிக்கப் பட்ட தினத்தை விட மூன்று வாரங்கள் தாமதமாக அதாவது ஆகஸ்ட் 22 அன்று நிகழ்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்