TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 5 , 2020 1452 days 670 0
  • விருதுநகர் மாவட்டத்தின் நாரணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியரான கருணைதாஸ் அவர்கள் மைக்ரோசாப்ட்டின் சர்வதேச சிறந்த ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
    • அதே போன்று நாரணாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியானது மைக்ரோசாப்டினால் சிறந்த பள்ளியாக (மைக்ரோசாப்ட் கண்காட்சிப் பள்ளி) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • ராமச்சந்திர குஹா அவர்கள், கிரிக்கெட்டின் காமன்வெல்த்: மனித இனத்திற்குத் தெரிந்த மிகவும் நுட்பமான மற்றும் அதிநவீன விளையாட்டுடன் ஒரு வாழ்நாள் ரீதியிலான அன்பு நிலை” (The Commonwealth of Cricket: A Lifelong Love Affair with the Most Subtle and Sophisticated Game Known to Humankind) என்ற தலைப்பு கொண்ட ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • டிஆர்டிஓ அமைப்பானது தற்போதைய மற்றும் எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் போர்ச் சூழல் தேவைகளுக்கு வேண்டி தனது 52 ஆய்வகங்களைச் சீரமைப்பதற்காக V. ராமகோபால் ராவ் என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
    • இதற்கு முன்பு ஒரு குழுவானது 2008 ஆம் ஆண்டில் P ராமாராவ் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்