TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 13 , 2020 1445 days 638 0
  • இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் காணொலி முறையில் மாநாடு ஒன்றை நடத்தின.
    • இந்த மாநாட்டின் போது இந்த நாடுகள் ஐந்தாம் தலைமுறை (5G) தொழில்நுட்பத்தில் ஒன்றிணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன.
  • ஆஸ்திரேலிய அரசானது இந்தியாவுடன் மேம்பட்ட வர்த்தக உறவுகளுக்காக முன்னாள் கிரிக்கெட் வீரரான மேத்தியு ஹைடன் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல் தலைவரான லிசா சிங் ஆகியோரை வர்த்தகத் தூதுவர்களாக நியமித்துள்ளது.
  • முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீரரான நோவாக் ஜோகோவிக், டென்னிஸ் பந்தைக் கொண்டு களத்தில் உள்ள பெண் நடுவரைத் தற்செயலாக தாக்கியதைத் தொடர்ந்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்