இந்தியா மற்றும் இரஷ்யாவிற்கு இடையேயான இருதரப்பு அரசாங்க ரீதியிலான உறவு வெற்றிகரமாக 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கான கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தோ-இரஷ்யா இளையோர் குழுவானது (International Federation of Indo-Russian Youth Clubs) பிரிக்ஸ் சர்வதேச மன்றத்துடன் (BRICS International Forum) இணைந்து “Vision for Future” எனும் நிகழ்ச்சியை புதுதில்லியில் உள்ள பிரவாஸி பாரதி கேந்திரிய மையத்தில் நடத்தியுள்ளது.