TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 26 , 2020 1433 days 710 0
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் துறைக் கழகமானது, 50,000 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக கோர்சேரா (CoursEra) என்ற ஆன்லைன் கற்றல் தளத்துடன் இணைந்துள்ளது.
  • குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த குஷி சந்தாலியா என்ற 17 வயது நிரம்பிய ஒரு சிறுமி ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் துன்சா சூழலியல் பாதுகாப்பினால் இந்தியாவிற்கான ஒரு பிராந்தியத் தூதுவராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது ஆக்ராவில் கட்டப்பட்டு வரும் முகலாயப் பேரரசிற்கு என்று அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சத்ரபதி சிவாஜி மகாராஜரின் பெயர் கொண்டு சூட்டப்பட இருக்கின்றது.
  • இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட நகரமானது உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்தா நகரில் (நொய்டா) அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்