TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 9 , 2020 1419 days 692 0
  • முழுவதும் சூரிய ஒளியால் செயல்படுத்தப்படும் முதலாவது விமான நிலையமாக  இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின்  (AAI - Airports Authority of India) புதுச்சேரி விமான நிலையம் உருவெடுத்துள்ளது.
  • பெரு நகர மும்பை மாநகராட்சியின் மாநகராட்சி ஆணையரான இக்பால் சிங் சஹல் என்பவர் “2020 ஆம் ஆண்டின் உலகளாவிய கோவிட் மீது போர் தொடுப்பவர்” என்ற விருதால் கௌரவிக்கப்பட்டார்.
  • தில்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியா அவர்கள் வரவேற்பறை அல்லது காபி-மேசைப் புத்தகமானபாபு : மறக்க முடியாதவர்” (coffee-table book titled Babu The Unforgettable) என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
  • இந்தியாவைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய விஷ்ணு சிவராஜ் பாண்டியன் என்பவர் சர்வதேச ஆன்லைன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பின் 5வது பதிப்பில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI - Securities and Exchange Board of India) ஒரு முழு நேர உறுப்பினராக  இருக்கும் மாதாபி பூரி பச் என்பவரின் பதவிக் காலமானது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • SEBI-யின் முழு நேர உறுப்பினராக இருக்கும் முதலாவது பெண் இவராவார். மேலும் செபியின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தனியார் துறையைச் சேர்ந்த முதலாவது நபரும் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்