TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 4 , 2020 1393 days 651 0
  • இந்திய இராணுவமானது இணையத்திற்கான பாதுகாப்புச் செயலி எனப்படும் ஒரு செய்தி அனுப்பும் செயலியைத் தொடங்கியுள்ளது.
    • இது தனது வீரர்களுக்குப் பாதுகாப்பாக குரல் வழிச் செய்தி, குறுஞ்செய்தி மற்றும் காணொலிச் சேவைகள் ஆகியவற்றை வழங்குகின்றது.
  • இந்திய விமானப் படையானது சுகோய் போர் விமானத்திலிருந்து பிரம்மோஸ் மீயொலி வேக ஏவுகணையைச்  சோதனை செய்துள்ளது.
    • இது வான்வெளியிலிருந்துச் செலுத்தப்படும் பிரம்மோஸின் ஒரு பதிப்பாகும்.
  • காங்கிரஸ் தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத்திற்கு வழங்கப்பட்டு இருந்த அக்கட்சியின் 'நட்சத்திரப் பிரச்சாரகர்' (star campaigner) என்ற அந்தஸ்து இந்திய தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப் பட்டுள்ளது.
    • இது "மாதிரி நடத்தை விதிகளை மீண்டும் மீண்டும் மீறியதற்காகவும், அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையை முற்றிலும் புறக்கணித்ததற்காகவும்" ரத்து செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்