TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 6 , 2020 1391 days 655 0
  • நியூசிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சராக பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்பவர் அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னால் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • ஐ.டி.எஃப் மகளிர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ருதுஜா போஸ்லே என்பவர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் பட்டத்தை வென்றுள்ளார்.
    • இந்தப் போட்டி எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடத்தப் பட்டது.
  • தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத் தலைவர் திலீப் ராத் அவர்கள் சர்வதேச பால் பண்ணைக் கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவிற்கு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • “பருவமழைத் திட்டம் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கணினி வசதிகளில் முதலீட்டின் பொருளாதார நன்மைகளை மதிப்பிடுதல்” என்ற தலைப்பில் தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக் குழு தயாரித்த ஒரு அறிக்கையை மத்திய மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் அவர்கள் அண்மையில் வெளியிட்டார்.
  • ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமானது பார்தி ஆக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொதுக் காப்பீட்டு வணிகத்தை கையகப்படுத்த, இந்தியப் போட்டி ஆணையமானது (Competition Commission of India) ஒப்புதல் அளித்து உள்ளது.
  • ஐவரி கோஸ்ட்டின் தற்போதைய அதிபரான அலசேன் ஓட்டாரா மூன்றாவது முறையாக ஒரு மகத்தான வெற்றியை (அடுத்த ஐந்தாண்டு கால அதிபர்) பெற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்