TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 8 , 2020 1389 days 585 0
  • ஐரோப்பாவில்  உள்ள ரோமாவானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 05 அன்று சர்வதேச ரோமானிய மொழி தினத்தை அனுசரிக்கின்றது.
    • யுனெஸ்கோ அமைப்பானது ரோமானிய மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்து ஊக்குவிப்பதற்காக 2015 ஆம் ஆண்டில் இத்தினத்தைப் பிரகடனப் படுத்தியது.
  • ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தரவுதளத்தின்படி, உலகில் உள்ள முதல் 2% விஞ்ஞானிகளில் குறைந்தது 100 விஞ்ஞானிகளை தமிழ்நாடானது கொண்டுள்ளது.
    • இதில் மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் முன்னணியில் உள்ளது.
  • அமெரிக்காவானது 2015 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அதிகாரப் பூர்வமாக வெளியேறி இருக்கின்றது.
  • நமாமி கங்கைத் திட்டத்திற்கான விளம்பரத் தூதராக  சச்சா சௌத்ரி என்பவர் உருவெடுத்துள்ளார்.
  • அசாமில் உள்ள ருப்சி விமான நிலையமானது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
    • இது அசாமின் 7வது விமான நிலையம் மற்றும் வடகிழக்கின் 14வது விமான நிலையம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்