TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 12 , 2020 1385 days 699 0
  • வங்க தேசமானது திருநர் முஸ்லீம்களுக்காக என்று மதகுருக்களுடன் கூடிய தனது முதலாவது இஸ்லாமியப் பள்ளியைத் திறந்துள்ளது.
  • நொய்டா பெருநகர மெட்ரோவின் 50வது பிரிவு நிலையமானது திருநர் சமூகத்திற்கு என்று  அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
    • இது தற்பொழுது “வானவில் நிலையம்” என்றும் “பெருமை நிலையம்” என்றும் அழைக்கப் படும்.
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது “துரிதச் சீட்டுகள்/பாஸ்ட் டேக்குகள்” (FASTAG) குறித்த ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
    • இந்த அறிக்கையானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியிலிருந்து நான்கு சக்கர வாகனங்களுக்கு “பாஸ்டேக்குகளை” கட்டாயமாக்குகின்றது.
  • எடா என்ற ஒரு சூறாவளியானது கெளதிமாலாவில் கரையைக் கடந்தது.
    • இது ஒரு மத்திய அமெரிக்க நாடாகும்.
  • இந்தியத் தூதரான விதிஷா மைத்ரா என்பவர் நிர்வாகம் மற்றும் நிதிநிலைக் கேள்விகள் குறித்த ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழுவிற்கு (Advisory Committee on Administrative and Budgetary Questions - ACABQ) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
    • ACABQ ஆனது ஐக்கிய நாடுகளின் கீழ் உள்ள ஒரு துணை அமைப்பாகும்.
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சரான கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் நாட்டில் சூரிய ஒளியை அடிப்படையாகக் கொண்ட முதலாவது பல்முனை-கிராமக் குடிநீர் விநியோகத் திட்டத்தை அருணாச்சலப் பிரதேசத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
  • ஜப்பான் ஆனது டோக்கியோவில் நடைபெற்ற ரிகோஷி நோ ரேய் என்ற ஒரு நிகழ்ச்சியில் புமிஹிட்டோ கிரீடம் சூடியுள்ள பட்டத்து இளவரசர் அகிஷினோவை சிம்மாசனத்திற்கு உரிய வாரிசாக அறிவித்துள்ளது.
    • இவருடைய மூத்த சகோதரரான பேரரசர் நாருஹிட்டோ கடந்த ஆண்டு மன்னராக அறிவிக்கப் பட்டார்.
  • சூடான் நாடானது தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்போர் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டுள்ளது.
    • இது அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட ஒரு பட்டியலாகும்.
  • யூடியூப் அலைவரிசையில் நீதிமன்றச் செயல்பாடுகளை நேரலையில் ஒளிபரப்பிய முதலாவது உயர்நீதிமன்றம் குஜராத் உயர்நீதிமன்றம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்