பிறமொழிகளில் உள்ள சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை பொதுமக்கள் அறியும் வகையில் அரசின் சார்பில் இலவச தொலைபேசி எண் தமிழக அரசால் விரைவில் அறிமுகப் படுத்தப்படவுள்ளது.
இந்த எண்ணில் எந்த மொழியைச் சேர்ந்த சொல்லாக இருந்தாலும் அதற்கு நிகரான தமிழ் சொல் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதேபோன்று தமிழறிஞர்கள், பொதுமக்கள் தாங்கள் கண்டறிந்த கலைச்சொற்களை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.