TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 17 , 2020 1380 days 606 0
  • புதுச்சேரி அரசானது தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய மருத்துவ மையத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் முதன்முறையாக, மும்பை மெட்ரோ இரயிலானது அதிர்வுகளை தாங்கும் தடங்களை அமைக்கவுள்ளது.
    • இது 22 அதிர்வு டெசிபில்கள் வரை அதிர்வுகளைத் தாங்கும் திறன் கொண்டது.
  • இந்தியாவின் முதலாவது சந்தன அருங்காட்சியகம் கர்நாடகாவின் மைசூருவில் அமைக்கப் பட்டு வருகின்றது.
  • பாலிவுட் நடிகரான சோனு சூட் அவர்கள் “நான் ஒரு மேசியா அல்ல” என்ற தனது சுயசரிதையை வெளியிட உள்ளார்.
  • குருகிராமில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக ஹரியானா மாநில முதல்வரான மனோகர் லால் கட்டார்  “காற்று நலத் திட்டம்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
  • அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா அவர்களால் எழுதப்பட்ட “வாக்குறுதியளிக்கப்பட்ட  ஒரு நிலம்” என்ற புத்தகமானது வெளியிடப்பட உள்ளது.
  • இந்தியாவில் தேசிய கை-கால் வலிப்பு தினமானது நவம்பர் 17 அன்று கொண்டாடப் படுகின்றது.
    • கை-கால் வலிப்பு என்பது நாள்பட்ட அளவில் மூளையில் ஏற்படும் ஒரு பிரச்சினை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்