TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 21 , 2020 1376 days 691 0
  • லாரசன் மற்றும் டூப்ரோ நிறுவனமானது ஆனது  ககன்யான் திட்டத்தின் முதலாவது வன்பொருளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
  • ஐயோட்டா என்ற ஒரு சூறாவளியானது (ஹரிக்கேன்) மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவில் கரையைக் கடந்தது.
  • இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது கடந்த 16 ஆண்டுகளில் முதன்முறையாக 2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நாட்டிற்குத் தனது முதலாவது பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றது.
  • வன உரிமைகள் சட்டம், 2006 என்ற சட்டமானது ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
    • இந்தச் சட்டமானது அந்த ஒன்றியப் பிரதேசத்தில் முதன்முறையாக வனப் பொருட்கள் சேகரிப்போர் சமூகத்தின் உரிமைகளை அங்கீகரிக்கின்றது.
  • அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானதுசப்பேர்எனப்படும் ஒரு கொடிய வைரஸ் தற்பொழுது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதை உறுதி செய்துள்ளது.
    • தற்பொழுது பொலிவியா ஆனது இந்த வைரஸ் பரவுதலை எதிர்கொண்டு வருகின்றது.
  • அமெரிக்க அரசானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகள் குறைக்கப் படும் என்று அறிவித்துள்ளது.
  • சர்வதேச மோசடி விழிப்புணர்வு வாரமானது நவம்பர் மாதத்தின் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை அனுசரிக்கப் படுகின்றது.
  • நவம்பர் 19 ஆம் தேதியானது உலகக் குடிமக்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • மால்டோவா நாடானது அந்நாட்டின் முன்னாள் பிரதமரான மையா சாண்டு என்பவரைத் தனது முதலாவது பெண் அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்