TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 1 , 2020 1366 days 713 0
  • தமிழ்நாடு மாநிலமானது தொடர்ந்து 6வது முறையாக உறுப்பு தானத்தில்  சிறந்த மாநிலம் என்ற  விருதைப் பெற்றுள்ளது.
  • சமீபத்தில், மகாராஷ்டிர மாநில அரசானது மும்பையில் நீர் சுத்திகரிப்பு (உப்பு நீக்கம்) ஆலையை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
    • தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு நீர் சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கும் 4வது மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
  • 11வது தேசிய உறுப்பு தான தினமானது 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தினால் அனுசரிக்கப்பட்டது.
  • ரஷ்யாவானது ஸிர்கோன் என்ற ஒரு மீயொலி வேக ஏவுகணையை ஆர்க்டிக் பகுதியில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.
    • இந்த ஏவுகணையானது மாக் 8 வேகத்தில் வெள்ளைக் கடலிலிருந்து பேரண்ட்ஸ் கடல் பகுதிக்கு ஏவப்பட்டது.
  • பூடான் நாடானது ஜெர்மனியுடன் ராஜாங்க உறவுகளைத் தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
    • கடந்த 7 ஆண்டுகளில் பூடான் பேரரசின் முதலாவது இராஜாங்க உறவுமுறை இதுவாகும்.
  • மாதவிடாய் சுகாதாரத் துணிகள், உறி பஞ்சுகள் ஆகியவற்றை இலவசமாக வழங்கும் உலகின் முதலாவது நாடு ஸ்காட்லாந்து ஆகும்.
    • மாதவிடாய் காலப் பொருள்களுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டிற்கு எதிராக உலகில் இது போன்ற நடவடிக்கையை எடுத்திருக்கும் முதலாவது நாடு ஸ்காட்லாந்து ஆகும்.
  • நியூஸிலாந்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் கௌரவ் சர்மா அவர்கள் அயல்நாட்டில் சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்த முதலாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாராளுமன்றவாதி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
    • இவர் முதலில் நியூசிலாந்தின் பூர்வாங்க மொழியான மௌரி என்ற மொழியிலும் அதன் பின்னர் சமஸ்கிருத மொழியிலும் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார்.
  • சமீபத்தில் நிலக்கரியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முதலாவது மற்றும் கடைசி அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்துள்ளது.
    • பெரும்பாலான வளைகுடா நாடுகள் அதிக அளவு எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களைப் பெற்றுள்ளதால் தங்களின் மின்சாரத் தேவைகளை எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி ஆலைகளைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்