கர்நாடகா மாநிலம் பெலகாவியில் உள்ள இந்தியாவின் மிக உயரமான கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. வரலாற்றுப் புகழ்பெற்ற பெலகாவிக் கோட்டையின் அருகில் உள்ள கோடே கேரெவில் அமைந்துள்ள இந்த 110 மீட்டர் உயர கொடிக் கம்பமானது புனேவில் உள்ள 107 மீட்டர் கொடிக் கம்பம் மற்றும் பஞ்சாபில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அட்டாரியில் (Attari) உள்ள 105 மீட்டர் கொடிக் கம்பம் ஆகியவற்றைக் காட்டிலும் உயரமானதாகும்.