TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 3 , 2020 1364 days 672 0
  • கீத் கோம்ஸ் என்பவர் இயக்கிய ஷேம்லெஸ் எனும் ஒரு குறும்படமானது 93வது ஆஸ்கர் விருதுகள் அல்லது அகாடமி விருதுகளின் குறும்படப் பிரிவில் போட்டியிட இந்தியாவால் அதிகாரப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
  • அயோத்தி விமான நிலையத்தை மரியாதை புருஷோத்தம் ஸ்ரீ ராம் விமான நிலையம் என மறுபெயரிடுவதற்கான யோசனைக்கு உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்த முன்மொழிவு அந்த மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பின்னர் பயணியர் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப் படும்.
  • லடாக்கானது லே பகுதியில் உள்ள இந்திய விமானப் படை நிலையத்தில் அதிக உயரத்தில் ஒரு மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்ட அமைப்பைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் ஆக்ஸிலரேட்டர் ஆய்வுக் கூடமானது (Accelerator Lab)  சமூக மட்டத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்ப்பதற்காக கடைமட்டப் புத்தாக்கத் தரவுதளத்தை (Grassroot Innovation Database) அறிமுகப்படுத்தி உள்ளது.
    • இது Grassroots Innovation Augmentation Network, ஹனி பீ நெட்வொர்க் நிறுவனம் மற்றும்  ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் இந்திய ஆக்ஸிலரேட்டர் ஆய்வுக் கூடம் ஆகியவற்றால் பொதுப் பயன்பாட்டிற்காக உருவாக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்