TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 7 , 2020 1360 days 540 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு  அமைப்பு (SCO) மன்ற நாட்டுத் தலைவர்களின் 19வது சந்திப்பில் பகிரப்பட்ட புத்த மதப் பாரம்பரியம் குறித்த ஒரு SCO ஆன்லைன் கண்காட்சியானது  தொடங்கி வைக்கப் பட்டது.
    • இதே வகையைச் சேர்ந்த முதலாவது கண்காட்சி இதுவாகும்.
  • இந்தியக் கிரிக்கெட் வீரரான விராட் கோலி ஒரு நாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ரன்களை மிக விரைவாக (251 போட்டிகளில்) எட்டி சச்சின் டெண்டுல்கரால் நிகழ்த்தப்பட்டிருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
  • சமீபத்தில் கர்நாடக மாநில உயர் நீதிமன்றமானது 18 வயது நிரம்பிய எந்தவொரு தனிநபரும் (வயது வந்தோர்) அவருடைய விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொள்வது அடிப்படை உரிமை என்றும் இது இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளது.
    • இந்தத் தீர்ப்பானது நீதியரசர் S. சுஜாதா மற்றும் சச்சின் சங்கர் மகதும் ஆகியோரைக் கொண்ட ஒரு அமர்வினால் வழங்கப்பட்டுள்ளது.
  • சீனா கடந்த 30 ஆண்டுகளில் தற்பொழுது முதல்முறையாக இந்தியாவிடமிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
    • உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளர் நாடு இந்தியா ஆகும். உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதியாளர் நாடு சீனா ஆகும்.
  • ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சியை விற்பனைக்கு அனுமதிக்க இருக்கும் முதலாவது நாடு சிங்கப்பூர் ஆகும்.
    • இந்த இறைச்சியானது கோழிகளைக் கொல்லாமல் விலங்கு செல்களிலிருந்து உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
  • தேசிய அறிவியல் திரைப்படத் திருவிழாவின் 10வது பதிப்பானது காணொலி வாயிலாக திரிபுராவில் நடத்தப் பட்டது.
    • இது திரிபுரா மாநில அரசு, இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான விக்யான் பிரசார் ஆகியவற்றினால் கூட்டாக இணைந்து ஒருங்கிணைக்கப் படுகின்றது.
  • மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் தரைவழி இணைப்பு தொலைபேசியிலிருந்து கைபேசிகளுக்கு அழைப்புகளை மேற்கொள்வதற்கு வேண்டி எண்களுக்கு முன்னால் 0 சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
  • ஆந்திர மாநில சட்டமன்றமானது அம்மாநிலத்தில் இணையவழி விளையாட்டைத் தடை செய்யும் ஆந்திரப் பிரதேச விளையாட்டு (திருத்தம்) மசோதா 2020 (AP Gaming (Amendment) Bill) என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • வாரணாசியின் அன்னபூர்ணா சிலையானது கனடாவிலிருந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றது.
  • GIFT நகரத்தின் கட்டுப்பாட்டாளரான சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையமானது சர்வதேசக் காப்பீட்டு மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆகியுள்ளது.
    • GIFT ஆனது (Gujarat International Finance Tec City) இந்தியாவில் செயல்பாட்டு நிலையிலிருக்கும் முதல் ஸ்மார்ட் சிட்டி மற்றும் சர்வதேச நிதிச் சேவை மையமாகும்.
  • சமீபத்தில் ரிசர்வ் வங்கியானது HDFC வங்கியை அதன் டிஜிட்டல் 2.0 என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டு இருந்த அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டுக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்