TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 9 , 2020 1357 days 528 0
  • ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தைப் சேர்ந்த முதலாவது துரோணாச்சாரியா விருதைப் பெற்றவரான குல்தீப் ஹண்டோ அவர்கள் பிரதமரின் “ஃபிட்  இந்தியா” என்ற பிரசாரத்தின் தூதுவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • சென்னை மெட்ரோ இரயிலானது அமெரிக்காவில் உள்ள உலகப் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து சர்வதேசப் பாதுகாப்பு விருது – 2020 என்ற விருதைப் பெற்றுள்ளது.
  • உதய் சங்கர் என்பவர் 2020-21 ஆம் ஆண்டிற்கான இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
    • இப்பதவியில் தற்பொழுது இருக்கும் சங்கீதா ரெட்டி என்பவருக்கு மாற்றாக இவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொழில்சார் சொத்துரிமை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
    • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரு நாடுகளும் இணைய நெறிமுறை குறித்த சிறந்த நடைமுறைகள், அறிவு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்கின்றது.
  • ஓமன்-இந்தியா என்ற ஒரு தோழமைக் கூட்டமைப்பு அமைக்கப்படும் என்று ஓமன் அரசு அறிவித்துள்ளது.
    • மேற்கு ஆசியாவில் ஓமனால் தொடங்கப்பட்ட இதே வகையைச் சேர்ந்த முதலாவது முன்னெடுப்பு இதுவாகும்.
  • சிரோமணி அகாலி தளத்தின் ஆதரவாளர் மற்றும் பஞ்சாப்பின் முன்னாள் முதலவரான பிரகாஷ் சிங் பாதா அவர்கள் தனது பத்ம விபூஷன் விருதைத் திரும்ப ஒப்படைத்துள்ளார்.
  • முகநூல் நிறுவனத்தினால் நிறுவப்பட்ட “லிப்ரா” என்ற மெய்நிகர் நாணயமானது “டெய்ம்”  (Diem) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
    • டெய்ம் என்பதுதினம்என்பதைக் குறிக்கும் ஒரு இலத்தீன் சொல்லாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்