TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 10 , 2020 1357 days 542 0
  • வானியலில் தனது நட்சத்திரத் தொகுப்பு (விண்மீன் சார்ந்த) கண்டுபிடிப்புகளுக்காக என்று வெகுவாக அறியப்படும் பியூர்டோ ரிக்கோவின் மிகப்பெரிய ஆர்சிபோ தொலைநோக்கியானது வெடித்துச் சிதறியது.  
    • 1963 ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட இது உலகில் உள்ள 2வது மிகப்பெரிய ஒற்றை – குடை அமைப்பு கொண்ட ரேடியோ தொலைநோக்கியாகும்.
  • நீதியரசர் முரளி சங்கர் குப்பு ராஜு மற்றும் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாகப் பொறுப்பேற்றனர்.
    • இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் நீதியரசர் விவேக் பூரி மற்றும் அவருடைய மனைவி அர்ச்சனா பூரி ஆகியோர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாகப் பொறுப்பேற்றனர்.
  • “பிக்செல்” என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் மற்றும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் ஆகியவை இந்தியாவின் முதலாவது தனியார் தொலையுணர் செயற்கைக்கோளைச் செலுத்துவதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 04 அன்று, சென்செக்ஸ் ஆனது முதன்முறையாக 45000 புள்ளிகளை எட்டியது.
  • சமீபத்தில் இலட்சத் தீவின் நிர்வாகியான தினேஸ்வர் சர்மா அவர்கள் காலமானார்.
  • 2020  ஆம் ஆண்டு டிசம்பர் 04 அன்று வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் நிறுவன தினமானது அனுசரிக்கப் பட்டது.
    • இந்த அனுசரிப்பின் போது, மத்திய நிதித் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்கள்இந்தியாவில் கடத்தல் – 2019/20” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
  • திருநர் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதலாவது குழந்தைகள் இல்லமானது விரைவில் பெங்களூரு நகரில் தொடங்கப் பட உள்ளது.
  • ஐக்கியப் பேரரசானது உலகின் முதலாவது மாசுபட்ட காற்றினால் ஏற்படும் இறப்பு அல்லது சட்டப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட காற்று மாசுபாட்டினால் ஏற்பட்ட ஒரு இறப்பைப் பதிவு செய்துள்ளது.
  • பிரபல தமிழ்ப் புத்தக வெளியீட்டாளரான கிரியா ராமகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் சென்னையில் காலமானார்.
    • கிரியாவின் தற்போதைய தமிழ் அகராதி (தமிழ் - தமிழ் - ஆங்கிலம்) என்பதை வெளியிட்டதன் மூலம் அவர் மிகவும் பிரபலமானவர்.
  • பிபிசியின் '2020 ஆம் ஆண்டின் 100 பெண்கள்' பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘Casteless Collective' என்ற இசைக்குழுவின் கானா பாடகர் இசைவாணி அவர்கள் இடம் பெற்றுள்ளார்.
    • தடகள வீரர் மனாசி ஜோஷி, காலநிலை ஆர்வலர் ரிதிமா பாண்டே மற்றும் போராட்டத் தலைவர் பில்கிஸ் பானோ ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ள மற்ற இந்தியப் பெண்கள் ஆவர்.
  • உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • ஹைதராபாத்தைச் சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்பவர் இந்தியாவில் 14 வயதில் பட்டம் பெற்ற முதல் பட்டதாரி ஆவார்.
    • அவர் ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தின் ஜாம்நகர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் தலா ஒரு ஆயுர்வேத மருத்துவ நிறுவனங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்