TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 11 , 2020 1355 days 599 0
  • சீரம் இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதார் பூனாவாலா அவர்கள் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிய மனிதர்கள் என்ற விருது வழங்கப்பட்ட 6 நபர்களில் ஒருவராவார்.
    • இந்த விருதானது சிங்கப்பூர் தினசரிப் பத்திரிக்கையான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் என்ற பத்திரிகையால் வழங்கப் பட்டுள்ளது.
  • சமீபத்தில் சீனாவானது கொடிய வறுமையை ஒழிப்பதற்கான தனது 8 ஆண்டு காலத் திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
  • சமீபத்தில் மத்திய அரசானது கேரளாவில் உள்ள ராஜீவ் காந்தி உயிரித் தொழில்நுட்ப மையத்தின் 2வது வளாகத்திற்கு எம்எஸ் கோல்வால்கர் என்ற ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தினுடைய கருத்தாக்கம் கொண்டவரின் நினைவாக மறுபெயரிட்டுள்ளது.  
  • ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணியானது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப் பட்டது.
  • ஜெகன் தருவாலா என்பவர் பஹ்ரைனில் நடைபெற்ற சாஹிர் கிராண்ட் பிரிக்ஸின் பார்முலா 2 என்ற பந்தயத்தில் வெற்றி பெற்ற முதலாவது இந்தியர் என்ற ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
  • HCL தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ரோஷிணி நாடார் மல்கோத்ரா அவர்கள் ஹரூன் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலில் நாட்டில் உள்ள பணக்காரப் பெண்மணிகள் என்ற வரிசையில் முதலிடத்தைப் பிடித்து உள்ளார்.
    • இவருக்கு அடுத்து பயோகான் நிறுவனத்தைச் சேர்ந்த கிரண் மஜும்தார் ஷா அவர்கள் அடுத்த இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளார்.
  • ஜப்பான் 2021 ஆம் ஆண்டில் 7 அணிகள் பங்கேற்கும் பிஃபா உலகக் கோப்பையை நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்