TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 13 , 2020 1353 days 604 0
  • இனப் படுகொலையைத் தடுத்தல், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவம் மற்றும் அனுசரிப்பு மீதான சர்வதேச தினமானது டிசம்பர் 09 அன்று அனுசரிக்கப் பட்டது.
    • இதே தினம் மனித உரிமைகள் தொடர்பான முதலாவது ஒப்பந்தமான “இனப் படுகொலை ஒப்பந்தம்” எனப்படும் இனப் படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டித்தல் குறித்த 1948 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் நினைவைக் குறிக்கின்றது.
  • மேற்கு வங்கமானது தாஜ்பூரில் தனது முதலாவது ஆழ்கடல் துறைமுகத்தின் கட்டுமானத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • ஆழ்கடல் துறைமுகமானது மிகப்பெரிய மற்றும் அதிக எடை ஏற்றப்பட்ட கப்பல்களின் பயன்பாட்டிற்காக என்று பொதுவாக ஏற்படுத்தப் படுகின்றது.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கு எதிராக தங்கள்  உயிரைப் பணயம் வைத்து அதை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மளிகைக் கடைப் பணியாளர்கள், பொருட்களை வீடுகளுக்கேச் சென்று வழங்குபவர்கள் போன்ற அத்தியாவசியப் பணியாளர்கள் டைம் பத்திரிக்கையின் இந்த ஆண்டின் நபர்களுக்கான விருதினை வென்றுள்ளனர்.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 08 அன்று, இந்தியக் கடற்படையானது ஐஎன்எஸ் கல்வாரி என்ற கப்பலின் மீது கடற்படைக் கொடியானது முதன்முறையாக ஏற்றப் பட்டதை அனுசரிப்பதற்காக 53வது நீர்மூழ்கி தினமானது அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்