TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 14 , 2020 1352 days 488 0
  • சர்வதேச கடல்சார் அமைப்பானது NavIC அமைப்பை உலகளாவிய ரேடியோ கண்காணிப்பு அமைப்பின் ஓர் அங்கமாக அங்கீகரித்துள்ளது.
  • இன்டர்போலின் தெற்காசியப் பிரிவில் இருந்து ‘கிராலர்’ என்ற ஒரு மென்பொருளை வாங்கிய இந்தியாவின் முதல் நிறுவனமாக மகாராஷ்டிர மாநில சைபர் துறை உருவெடுத்துள்ளது.
    • இந்த மென்பொருள் நாடு முழுவதும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக, அரசின் நடவடிக்கையான ஆபரேஷன் பிளாக்ஃபேஸ் (Operation Blackface) என்ற ஒரு நடவடிக்கையில் பயன்படுத்தப் படும்.
  • கடலுக்கடியில், கொச்சி மற்றும் லட்சத்தீவு பகுதிகளை ஒளியிழை கம்பி வடம் (Optical Fibre Cable) மூலம்  இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் வீரரான விராட் கோலி அவர்கள் சமீபத்தில் ரோஹித் சர்மாவால் நிகழ்த்தப்பட்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவில் 50 ரன்கள் எடுத்த சாதனையைச் சமன் செய்துள்ளார்.
  • இந்தியக் கடற்படையானது ஆளில்லா குட்டி விமானங்களைக் கையாளுவதற்காக இஸ்ரேலின் ‘ஸ்மாஷ் 2000 பிளஸ்’ என்ற  அமைப்பை வாங்க உத்தரவிட்டுள்ளது.
  • எழுத்தாளரான அமீஷ் திரிபாதி அவர்கள் தனது புதிய புனைக் கதைப் புத்தகமான “தர்மா : அர்த்தமுள்ள வாழ்விற்கான காவியங்களை குறிவிலக்கம் செய்தல்” (Dharma: Decoding the Epics for a Meaningful Life) என்ற ஒன்றை அறிவித்துள்ளார்.
  • நீதியரசரான ராஜேஷ் பிண்டால் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றியப் பிரதேசங்களுக்கான பொது உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அந்த உயர் நீதிமன்றத்தின் முதலாவது பெண் தலைமை நீதிபதியான கீதா மிட்டலின் ஓய்விற்குப் பிறகு இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய இராணுவத்தில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய நிர்வாகப் படைப் பிரிவான இராணுவப் படைப் பிரிவானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 08 அன்று இராணுவப் படைப் பிரிவின் 260வது படைப் பிரிவு தினத்தை அனுசரித்தது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது மகாராஷ்டிராவில் உள்ள கரட் ஜனதா சஹாகாரி என்ற வங்கியியல்  நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்துள்ளது.
    • ஒரு வங்கியின் நிதியியல் நீர்மத்தின் போது, அதில் நிதி இருப்பு வைத்து உள்ளவர்கள் நிதி இருப்புக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து ரூ.5 இலட்சம் வரை இருப்புத் தொகையை மீண்டும் பெற முடியும்.
  • ஐக்கியப் பேரரசிற்குப் பிறகு தனது குடிமக்களுக்கு பைசர் நோய்த் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்த இரண்டாவது நாடு கனடா ஆகும்.
  • கர்நாடக மாநில சட்டசபையானது பசுவதை எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
    • இது அம்மாநிலத்தில் பசு வதையை முற்றிலும் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 09 அன்று, பிஎஸ்இ சென்செக்ஸ் ஆனது முதன்முறையாக 46000க்கும் மேலான புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்