TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 21 , 2020 1345 days 650 0
  • பாகிஸ்தான் நாடானது தனது புதிய சட்டத்தின் ஒரு பகுதியாக கற்பழிப்பாளர்களுக்கு மரண தண்டனை மற்றும் இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.               
  • பிரதமர் மோடி 2021 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பிரிட்டனின் பிரதமரான போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு உள்ளார்.
    • இந்த மாநாடானது ஐக்கியப் பேரரசினால் நடத்தப்பட உள்ளது.
  • இந்தியா மற்றும் வங்க தேசத்திற்கு இடையிலான 55 ஆண்டு பழமையான சிலாகட்டி-ஹால்டிபாரி (மேற்கு வங்கம்) இரயில் இணைப்பானது தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
    • இந்த இணைப்பானது 1965 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போரின் போது துண்டிக்கப் பட்டது.
  • மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சரான நிதின் கட்கரி அவர்கள் ஊரகப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும் விவசாயிகளுக்கான கூடுதல் வருமானத்தை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டி ”வேதம் சார்ந்த ஓவியத்தை” வெளியிட்டுள்ளார்.
    • மாட்டுச் சாணத்தினால் உருவாக்கப்படும் இந்த ஓவியமானது காதி மற்றும் கிராமத் தொழிற்துறை ஆணையத்தின் மூலம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
  • இந்தியாவானது உலக அளவில் நேர்மையான விளையாட்டுச் சூழலை உறுதிப்படுத்துவதற்காக உலக ஊக்க மருந்து எதிர்ப்பு ஆணையத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.
    • இந்தியாவினால் வழங்கப்படும் இந்தப் பங்களிப்பானது சவுதி அரேபியா, சீனா மற்றும் எகிப்து ஆகிய அரசுகளினால் வழங்கப்படும் பங்களிப்பை விட மிக உயர்ந்ததாகும்.
  • பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான முகமது அமீர் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து தனது ஒய்வை அறிவித்துள்ளார்.
  • சான் சிட்ரோ என்ற ஒரு இயக்கமானது கியூபாவின் கலைப் பணிகளின் மீதான தணிக்கைக்கு எதிரான போராட்டமாகியூபாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
  • பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரியான சசி சேகர் வேம்பதி அவர்கள் ஆசிய பசிபிக் ஒளிபரப்பு ஒன்றியத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • சமீபத்தில் இந்திய அரசு மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை நாட்டின் ஊரகக் கட்டமைப்பு மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றிற்கு ஆதரவு அளிப்பதற்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • அமெரிக்க ஊடக ஆளுமை மற்றும் நிகழ்நேர தொலைக்காட்சிக் கலைஞரான கெய்லி ஜென்னர் என்பவர் போர்ப்ஸ் பத்திரிகையின் 2020 ஆம் ஆண்டின் அதிக ஊதியம் பெறும் ஆளுமையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்