TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 28 , 2020 1338 days 609 0
  • டைரக்ட்-டு-ஹோம் (டி.டி.எச்)/நேரடி வீட்டிற்கு ஒளிபரப்பு செய்யும் சேவைகளில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் அதன் உரிம காலத்தை இருபது ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
    • இந்தியாவானது உலகின் மிகப்பெரிய டி.டி.எச் சந்தையாகும்.
  • வினீத் அகர்வால் அவர்கள் ASSOCHAM என்ற அமைப்பின் புதிய தலைவராக பதவியேற்று உள்ளார்.
    • இவர் ஹீரா நந்தானி குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான நிரஞ்சன் ஹீரா நந்தானி என்பவருக்குப் பதிலாக பதவியேற்று உள்ளார்.
  • விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அவர்கள் இந்தியா முழுவதும் எட்டு கேலோ இந்தியா சிறப்பு மையங்களைத் திறந்து வைத்து உள்ளார்.
    • இந்த மையங்கள் அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், தெலுங்கானா, கேரளா, நாகாலாந்து, ஒடிசா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அமைந்து உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்