TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 29 , 2020 1337 days 633 0
  • சமீபத்தில் யுனிசெப் ஆனது கோவிட்-19 தடுப்பு மருந்து சந்தைத் தகவல் பலகையைத் தொடங்கி வைத்துள்ளது.
    • யுனிசெப் ஆனது கோவாக்ஸ் கொள்முதல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொள்முதல் முகவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சகமானதுசுவச்சதா அபியான்என்ற ஒரு கைபேசிச் செயலியைத் தொடங்கியுள்ளது.
    • இந்தச் செயலியானது தூய்மையற்ற கழிவறைகள் மற்றும் மனித மலத்தை மனிதனே அகற்றும் தொழிலாளர்கள் (Manual Scavengers) ஆகியோரின் தரவுகளை ஒன்று சேர்த்து புவியியல் குறியீடுகளை இடுவதற்காக மேம்படுத்தப் பட்டுள்ளது.
  • ஒடிசா மாநில முதல்வர் அவர்கள் ஓடிசாவின் ரூர்கேலாவில் இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி விளையாட்டு அரங்கம் கட்டப் படுவதாக அறிவித்துள்ளார்.
    • இந்த விளையாட்டு மைதானமானது 2023 ஆம் ஆண்டு எப்ஐஎச் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை நடத்த உள்ளது.
  • சாஹீன்” (ஈகிள் 1x) எனப் பெயரிடப் பட்ட சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒரு கூட்டு ஆகாயப் படைப் பயிற்சி பாகிஸ்தானின் சிந்து  மாகாணத்தில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்