TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 31 , 2020 1335 days 559 0
  • டெல்லி மெட்ரோவின் மெஜந்தா பாதையில் (ஜனக்புரி மேற்கு-தாவரவியல் பூங்கா) இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத இரயிலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் துவக்கி வைத்தார்.
    • 2002 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட டெல்லி மெட்ரோவானது இந்தியாவின் மிகப்பெரிய நகர்ப்புற துரிதப் போக்குவரத்து அமைப்பாகும்.
  • கட்டாய மத மாற்றங்களுக்கு எதிராக மத்திய பிரதேச அமைச்சரவை புதிய மதமாற்ற எதிர்ப்புச் சட்டமான லவ் ஜிகாத் எதிர்ப்பு என்று அறியப் படும் ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்தப் புதிய சட்டம் மத்தியப் பிரதேசத்தின் மதச் சுதந்திரச் சட்டம், 1968 என்ற சட்டத்திற்கு மாற்றாக அமைகிறது.
  • ஜிஎஸ்டி வரியினைச் செலுத்துவோர் தங்கள் வரியில் குறைந்த பட்சம் 1% அளவிலான பணத்தை ரொக்கமாகச் செலுத்த வேண்டும் என்று வருவாய் துறை சமீபத்தில் அறிவித்துள்ளது.
    • இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
  • கான்பூரின் ராமாய்பூர் கிராமத்தில் இந்தியாவின் முதல் மிகப்பெரிய தோல் பூங்காவை (Leather park) நிறுவ உத்தரப் பிரதேச அரசு தயாராக உள்ளது.
    • இந்த திட்டத்திற்கு சமீபத்தில் மத்திய வர்த்தக அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது.
  • “In Pursuit of Happiness" (மகிழ்ச்சியை நோக்கியப் பயணத்தில்) என்ற புத்தகம் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராஜீந்தர் சச்சரின் வாழ்க்கை வரலாறு என்பதாகும்.
    • "இந்திய முஸ்லீம் சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை அல்லது சச்சார் குழு அறிக்கை 2006" என வெகுவாக அழைக்கப்பட்ட ஒரு அறிக்கைக்கு அவர் பெயர் பெற்றவர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்