TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 3 , 2021 1332 days 734 0
  • இந்திய எண்ணெய்க் கழகம் ஆனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் விசையாழிகளுக்காக வேண்டி (turbines) நாட்டின் முதல் தொலைநிலைக் கண்காணிப்பு முறையை அறிமுகப் படுத்தியுள்ளது.
    • ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தை BHEL மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான BGGTS (BHEL-GE Gas Turbine Services) செயல்படுத்துகிறது.
  • நாட்டின் முதல் எத்தனால் ஆலையை பொது-தனியார் கூட்டின் கீழ் தனது மாநிலத்தில் அமைக்கும் ஒரு ஒப்பந்தத்தில் சத்தீஸ்கர் அரசானது கையெழுத்து இட்டு உள்ளது.
  • மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களுக்கான இந்தியாவின் முதல் பூங்கா (Pollinator park) ஆனது உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹால்டுவானி என்ற இடத்தில் நிறுவப் பட்டுள்ளது.
    • மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களில் தேனீக்கள், பறவைகள், பட்டாம்பூச்சிகள், அந்துப் பூச்சிகள், வண்டுகள், குளவிகள், வெளவால்கள் மற்றும் சிறிய பாலூட்டிகள் ஆகியவை அடங்கும்.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று ஐரோப்பிய ஒன்றியம்-இங்கிலாந்து வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தமான பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
  • விண்வெளியை அமைதியாகப் பயன்படுத்த இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக இந்தியாவிற்கும் பூடானிற்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • வெளிப்புற விண்வெளி ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் சபை 1963 ஆம் ஆண்டில் நிறைவேற்றியது.
  • ஆஸ்திரேலிய அரசானது அதன் பழங்குடி மக்களைக் கௌரவிப்பதற்காக வேண்டி அதன் தேசிய கீதத்தைத் திருத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்