TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 10 , 2021 1325 days 926 0
  • இந்திய அரசு, மேற்கு வங்க மாநில அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை இணைந்து மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின்  கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 105 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • சமீபத்தில் தில்லி அரசானது தேசியத் தலைநகரப் பகுதிகளில் பள்ளிக் குழந்தைகள் சுமந்து செல்லும் புத்தகப் பைகளின் எடைகளைக் குறைப்பதற்காக வேண்டி சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
    • அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பைகளின் எடையானது பள்ளிக் குழந்தைகளின் உடல் எடையில் 10% அளவிற்கும் அதிகமாக இருக்கக் கூடாது.
  • இந்தியாவின் 51வது சர்வதேசத் திரைப்படத் திருவிழாவின் சர்வதேசத் தலைமை நடுவராக அர்ஜென்டினாவைச் சேர்ந்த பாப்லோ சீசர் என்பவர் அறிவிக்கப் பட்டு உள்ளார்.
  • சமீபத்தில் உலக வங்கியானது உலகப் பொருளாதார வாய்ப்புகள் என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • இந்த அறிக்கையின்படி, இந்தியப் பொருளாதாரமானது 2020-21 ஆம் ஆண்டில் 9.6% என்ற அளவிற்குச் சரிவடைய இருக்கின்றது.
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மற்றும் மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் & குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிரிதி இராணி ஆகியோர் ‘டாய்காத்தான் 2021’ (Toycathon - 2021) என்ற ஒரு நிகழ்வைத் தொடங்கி வைத்துள்ளனர்.
    • இது உள்நாட்டு விளையாட்டுப் பொம்மைகளின் உற்பத்தியை ஊக்கப்படுத்த இருக்கின்றது.
  • யுனிசெப் அமைப்பானது ஜனவரி 01 அன்று உலகில் 3,71,504 குழந்தைகள் பிறந்து உள்ளதாக அறிவித்துள்ளது.
    • 59,995 குழந்தைப் பிறப்புகள் என்ற ஒரு எண்ணிக்கையுடன் இந்தியாவானது புத்தாண்டு அன்று உலகின் அதிக எண்ணிக்கையிலான குழந்தைப் பிறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
  • மத்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் அவர்கள் இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான முதலாவது தகவல் பிரிவை குஜராத்தில் உள்ள சூரத்தில் திறந்து வைத்துள்ளார்.
    • இது அந்நகரின் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஒடிசா மாநிலப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்