TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 11 , 2021 1324 days 724 0
  • ஆண்கள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் பெண் நடுவர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் கிளாரி போலோசக் பெற்றுள்ளார்.
    • சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலிய-இந்திய தொடரின் மூன்றாவது டெஸ்டில் நான்காவது நடுவராக (Fourth Umpire) அவர் பங்கேற்க உள்ளார்.
  • லடாக் பிராந்தியத்தின் மொழி, நிலம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக 10 பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • அரசாங்கத்தின் இக்குழுவிற்கு உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி அவர்கள் தலைமை தாங்குவார்.
  • தனது மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் தற்சார்படைய வேண்டி மத்தியப் பிரதேச மாநிலமானது 'Launch Pad Scheme' என்ற திட்டத்தை வகுத்துள்ளது.
  • கடவுளின் பெயரைப் பயன்படுத்தி ஒரு பொருளை விளம்பரம் செய்வது மற்றும் அதில் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறுவது சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்